W3C Web Resources



Monday, June 29, 2015

இந்திய அணியில் இடம்: அவுஸ்திரேலிய வீரரிடம் கம்பீர் தீவிர பயிற்சி!

இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட கவுதம் கம்பீர் மீண்டும் அணிக்கு திரும்புவதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.அவருக்கு முன்னாள் அவுஸ்திரேலியா வீரர் ஜஸ்டின் லாங்கர் பயிற்சி அளித்து வருகிறார்.ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் அணித்தலைவராக
கலக்கும் கம்பீர், இந்திய அணியில் மட்டும் சொதப்பல் ஆட்டத்தை ஆடுகிறார்.
இவரது மோசமான ஆட்டம் காரணமாக இந்திய அணி இவரை புறக்கணித்தது. இதனால் அணிக்கு திரும்ப முடியாமல் அவதிப்படுகிறார்.
இந்நிலையில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் வகையில் கம்பீர் தீவிர பயிற்சியில் களமிறங்கியுள்ளார்.
இதற்காக பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் மேற்கு அவுஸ்திரேலியா அணிகளின் பயிற்சியாளராக இருக்கும் ஜஸ்டின் லாங்கரிடம் கம்பீர் பயிற்சி பெற்று வருகிறார்.

No comments:

Post a Comment