W3C Web Resources



Sunday, June 21, 2015

டோனிக்கு வந்த புதிய சிக்கல்: ரகசிய விசாரணையில் களமிறங்கும் கிரிக்கெட் வாரியம்

ரித்தி ஸ்போர்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் இந்திய அணித்தலைவர் டோனிக்கு பங்குகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.டோனி, ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோர்களின் விளம்பர விவகாரங்களை ஒப்பந்தம் அடிப்படையில் ரித்தி ஸ்போர்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் கவனித்து வருகிறது.

இந்த நிறுவனத்தில் டோனிக்கு 15 சதவீத பங்குகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் இந்த நிறுவனத்தின் உரிமையாளரான அருண் பாண்டே, டோனியின் குடும்பத்திற்கு நெருங்கிய நபர் ஆவார்.
இது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைக்கு முரண்பட்ட செயலாகும். அதனால் டோனி இரட்டை ஆதாயம் பெறும் வகையில் ரித்தி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் அங்கம் வகிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை டோனியிடம் விசாரிக்க இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜக்மோகன் டால்மியா தலைமையில் 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment