கொம்மாதுறை சுடரொளி விளையாட்டு கழகம் நடத்திய அணிக்கு பேர் கொண்ட கிரிக்கெட் லீக் தொடரில் செங்கலடி மஞ்சள் தாரகை அணி சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.
ஏறாவூர் மைலோ அணிக்கு எதிரான இறுதி போட்டியில் சிறப்பாக செயற்பட்ட செங்கலடி மஞ்சள் தாரகை அணி சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது. இறுதி போட்டியில் வெற்றி பெற்ற செங்கலடி மஞ்சள் தாரகை அணிக்கு வெற்றி கிண்ணத்துடன் 12000.00 ரூபா பண பரிசிலும் வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை பெற்ற ஏறாவூர் மைலோ அணிக்கு வெற்றி கிண்ணமும் ரூபா 7000.00 பண பரிசிலும் வழங்கப்பட்டது லீக் தொடராக நடைபெற்ற இத் தொடரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரபலமான் பல அணிகள் களமிறங்கின. பலமான பல அணிகள் லீக் போட்டிகளோடு வெளியேறின. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய மஞ்சள் தாரகை அணி வெற்றி வாகை சூடியது.



No comments:
Post a Comment