W3C Web Resources



Saturday, June 20, 2015

வங்கதேசத்துக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி?

வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று டாக்காவில் இடம்பெற உள்ளது. பகல் இரவு போட்டியாக நடைபெறும் இப்போட்டி இன்று பி. ப 3.00 மணியளவில் இடம்பெற உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் நோக்குடன் வங்கதேசம் களமிறங்கவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்று வந்கதேசத்துக்கு பதிலடி கொடுக்கவும் தொடரை தக்கவைக்கவும் இந்திய அணி களமிறங்கவுள்ளது.

No comments:

Post a Comment