உலகெங்கிலும் ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான சிகரட் துண்டுகள் அகற்றப்பட்டு வருகின்றன.இவ்வாறு அகற்றப்படும் சிகரட் துண்டுகளை பாரிய சக்தி சேமிப்பமாக மாற்ற முடியும் என கொரியாவின் Seoul தேசிய பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
அகற்றப்படும் சிகரட் பில்டர்களில் இருந்து வெளியேற்றப்படும் ஆர்சனிக், ஈயம் ஆகிய மூலகங்கள் உட்பட தீங்கு விளைவிக்கக்கூடிய இரசாயனப்பதார்த்தங்கள் நிலத்தையும், நீர் வழிகளையும் மாசுபடுத்துகின்றன.எனவே இவற்றினை சேகரித்து மின்கலங்களை போன்று அதியுயர் சக்தி சேமிப்பகமாக பயன்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

No comments:
Post a Comment