W3C Web Resources



Thursday, August 7, 2014

ஆகஸ்ட் 22ல் ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி ரிலீஸ்!



பரத்தின் 25வது படம் 'ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி' . ஜி.எல்.ராகவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நந்திதா நடித்துள்ளார்.555 படத்திற்கு இசையமைத்த சைமன் இப்படத்துக்கும் இசையமைத்துள்ளார்.
முதல்முறையாக முழுநீள காமெடி படத்தில் நடித்துள்ளார் பரத். இதில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே படத்தில் 23 காமெடி நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஆகஸ்டு 15ல் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்', 'அஞ்சான்', 'சிநேகாவின் காதலர்கள்' ஆகிய மூன்று படங்கள் ரிலீஸ் ஆகின்றன.
ஆகஸ்ட் 29ல் 'பூலோகம்', 'சலீம்',  'இரும்புகுதிரை' ஆகிய மூன்று படங்கள் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில்  சற்றே யோசித்து,  எந்த படமும் ரிலீஸ் அறிவிக்காத ஆகஸ்ட் 22ம் தேதியில் 'ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி' ரிலீஸ் ஆகிறது.

No comments:

Post a Comment