W3C Web Resources



Thursday, August 7, 2014

சிம்புவிடம் இருந்து தப்பித்து வம்பில் மாட்டிக்கொண்ட ஹன்சிகா. போட்டி நடிகைகள் மகிழ்ச்சி…..!


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிம்பு-ஹன்சிகா காதல் முறிவடைந்தபின்னர் சிறிது காலம் நிம்மதியாக இருந்த ஹன்சிகாவை தற்போது வேறொரு வகையில் பிரச்சனை நெருங்கியுள்ளது. சிம்புவின் காதலி என்பதால் இதுவரை ஹன்சிகாவை யாரும் நெருங்காமல் இருந்தனர். ஆனால் தற்போது சிம்புவுடன் காதல் பிரேக் அப் ஆகிவிட்டதால் ஹன்சிகாவை காதலிக்க பல இளையதலைமுறை நடிகர்கள் துரத்தி வருகின்றனர்.

தமிழ் நடிகர்களை விட தெலுங்கு நடிகர்கள்தான் ஹன்சிகாவை விடாமல் துரத்தியபடி இருக்கின்றார்களாம். இதில் சூப்பர் ஸ்டாரின் தெலுங்கு நண்பரின் மகன் தொல்லை அளவுக்கு மீறி உள்ளதாம். ஹன்சிகாவை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு யாரும் அவரை நெருங்கவிடாமல் பாதுகாப்பு வளையம் போட்டு வைத்துள்ளாராம். தயாரிப்பாளர் அல்லது இயக்குனர்கள் கூட அவருடைய அனுமதியின்றி ஹன்சிகாவை பார்க்க முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.


சிம்புவிடம் இருந்து தப்பித்த ஹன்சிகா, தற்போது பெருமாளின் பெயர் கொண்ட அந்த நடிகரிடம் மாட்டிக்கொண்டு திணறுவதை அவருடைய போட்டி நடிகைகள் சந்தோஷமாக ரசித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment