W3C Web Resources



Saturday, July 26, 2014

மாமாங்கேஸ்வரர் தீர்த்தோற்சவம் -இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு


கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இலட்சக்கணக்கனோர் புடை சூழ கோலாகலமான முறையில் நடைபெற்றது.

இந்துக்களின் தாய்தந்தையை இழந்தவர்கள் மேற்கொள்ளும் பிதிர்க்கடன்களை தீர்க்கும் மிக முக்கிய தீர்த்த உற்சவமான ஆடி அமாவாசை தீர்;த்தோற்சவம் இன்று நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் நடைபெற்றது.

ஆடி அமாவாசை தீர்த்த உற்சவத்தின் மிக முக்கிய பதியான மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்த கேணியில் சிறப்பாக நடைபெற்றது.








No comments:

Post a Comment