ரோபோ வடிவமைப்பில் கைதேர்ந்த ஜப்பான் நிறுவனமான FANUC உலகின் வலிமை வாய்ந்த முதலாவது ரோபோவை உருவாக்கியுள்ளது.முன்னைய ரோபோக்களை விடவும் கூடிய பாரத்தினை தூக்கவல்ல இந்த ரோபோ ஒரே நேரத்தில் சுமார் 1.7 தொன் எடைகொண்ட இரு சிறிய கார்கள் அல்லது 24 மனிதர்களை தூக்கவல்லது. இலகுவானது மற்றும் கடுமையான வேலைகளை செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ பொருட்களை 4.7 மீற்றர் உயரத்திற்கு நகர்த்தவல்லது. மேலும் M-2000iA/1700L எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த ரோபோவானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இத்தாலியின் மிலன் நகரில் இடம்பெறவுள்ள கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment