W3C Web Resources



Saturday, June 13, 2015

கவனிப்பாரற்று கிடக்கும் கொம்மாதுறை மாணிக்க பிள்ளையார் கோவில் வீதி

செங்கலடி பிரதேச சபைக்கு உட்பட்ட கொம்மதுறை பிரதேசத்தில் உள்ள மாணிக்க பிள்ளையார் கோவில் வீதி
மற்றும் அதனூடாக செல்லும் கிளை வீதிகள் கடந்த பல வருடங்களாக புனரமைக்க படாமல் குன்றும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இவ் வீதியினை தினமும் பாடசாலை மாணவர்கள், முதியோர், வாகன சாரதிகள், பொதுமக்கள் என பலரும் பயன்படுத்துகின்றனர். இவர்கள் மிகவும் சிரமமான நிலையிலே இவ் வீதியினை பயன்படுத்துகின்றனர். மழை காலங்களில் இவ் வீதியில் நீர் தேங்கி நிற்பதாலும் போக்குவரத்தை மேற்கொள்வது சிரமமாக உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மக்களின் அன்றாட போக்குவரத்துக்கு பிரதான வீதியாக உள்ள இவ் வீதியினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களின் கவனத்திற்கு எடுத்து புனரமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


No comments:

Post a Comment