பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வென்றது. இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில் நடக்கிறது.
பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 138 ஓட்டங்கள் எடுத்தது. ஹபீஸ் அதிகபட்சமாக 42 ஓட்டங்கள் எடுத்தார். பந்துவீச்சில் தரிந்து கவுஷால் 5 விக்கெட் வீழ்த்தினார்.இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், 9 விக்கெட்டுக்கு 304 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
பின்னர் தொடங்கிய மூன்றாவது நாள் ஆட்டத்தில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 315 ஓட்டங்களுக்கு ஆல்–அவுட்டானது. சில்வா 80 ஓட்டங்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி சார்பில் யாசிர் ஷா 6 விக்கெட் வீழ்த்தினார்.பின்னர் 177 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை பாகிஸ்தான் அணி தொடங்கியது. முன்கள வீரர்கள் நிதானமாக விளையாடினாலும், பின் வரிசையில் உள்ளவர்கள் நிலைக்கவில்லை.
இதனால் பாகிஸ்தான் அணி 329 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட்டானது. பாகிஸ்தானின் அசார் அலி சதம் (117) அடித்தார். சிஹசாட் (69) அரைசதம் விளாசினார். பந்துவீச்சில் தமிங்க பிரசாத் 4 விக்கெட் வீழ்த்தினார்.இதைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு 153 ஓட்டங்கள் இலக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒருநாள் உள்ள நிலையில் இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

No comments:
Post a Comment