W3C Web Resources



Sunday, June 28, 2015

யூன் 30ம் திகதி ஒரு வினாடி அதிகம்: நாசா தகவல்

வரும் யூன் 30ம் திகதி ஒரு வினாடி அதிகமாக இருக்கும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது.அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராயச்சி மையம் பூமி, சூரியன், பால்வெளி அண்டம் ஆகியவை தொடர்பாக, ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் வரும் யூன் 30ம் திகதியன்று ஒரு வினாடி அதிகமாக இருக்கும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது, பூமி தன்னைத் தானே ஒருமுறை சுற்றிக் கொள்வதற்கு 86,400 வினாடிகளை எடுத்துகொள்கிறது.
ஆனால் வரும் யூன் 30ம் திகதியன்று பூமியின் சுழல் வேகம் குறைவதால், நாளை மறுநாளின் கால அளவு, 1 வினாடி அதிகமாக இருக்கும்.அதாவது, சர்வதேச ஒருங்கிணைப்பு நேரத்தில் (யுடிசி) 23:59:59 மணிக்கு பின்னர் 00:00:00 என மறுநாள் தொடங்கி விடும். ஆனால், யூன் 30ம் திகதியன்று, நேரம் 23:59:59 லிருந்து 23:59:60 க்கு மாறும். அதன்பின்னரே 00:00:00 என மறுநாள் தொடங்கும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment