W3C Web Resources



Thursday, June 25, 2015

ஐசிசி தரவரிசை: சங்கக்காரா 2வது இடம்.. முதல் 10 இடங்களுக்குள் 3 இந்திய வீரர்கள்

ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.இதில் தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் வழக்கம் போல் 902 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
இவருக்கு அடுத்தடுத்த இடத்தில் இலங்கை வீரர் குமார் சங்கக்காரா, ஹாசிம் ஆம்லா இடம் பெறுகின்றனர்.
இவரைத் தொடர்ந்து இந்திய அணியின் துணைத்தலைவர் விராட் கோஹ்லி 4வது இடத்தை பிடிக்கிறார்.
5வது இடத்தில் இலங்கை அணியின் சகலதுறை வீரர் டில்ஷான் இடம்பெற்றுள்ளார்.ஷிகர் தவான் 777 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.அதே வேளையில் இந்திய அணித்தலைவர் டோனி 734 புள்ளிகளை பெற்று 8வது இடத்தை பிடித்துள்ளார். வங்கதேச தொடரை இழந்தாலும், ஒருநாள் போட்டி அணிகளின் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து 2வது இடத்தில் நீடிக்கிறது. அதே சமயம் வங்கதேச அணி 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

No comments:

Post a Comment