W3C Web Resources



Thursday, June 25, 2015

தரிந்து குஷால், தமிங்க பிரசாத் மிரட்டல் பந்துவீச்சு: 138 ஓட்டங்களில் சுருண்டது பாகிஸ்தான் அணி


இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 138 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இலங்கை சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதில் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி கொழும்புவில் இன்று தொடங்கியது.இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
அதன் படி பாகிஸ்தான் அணி, தனது முதல் இன்னிங்சை விளையாடியது.ஆரம்பத்திலே பிரசாத்தின் பந்துவீச்சில், அகமது சிஹசாட் (1), அசார் அலி (26), யூனிஸ் கான் (6) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.நிதானமாக விளையாடி வந்த ஹபீசை (42) அரைசதம் எடுக்க விடாமல், குஷால் பவுல்ட் செய்தார்.
இதன் பின்னர் மிஸ்பா (7), ஷாபிக் (2), சர்பிராஸ் (14), வஹாப் ரியாஸ் (4), யாசிர் ஷா (15), சுல்பிகர்(5), ஜூனிட் கான் (2) வரிசையாக சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் 138 ஓட்டங்களிலே அனைத்து விக்கெட்டுகளையும் பாகிஸ்தான் அணி இழந்தது.பந்துவீச்சில் மிரட்டிய தரிந்து குஷால் 5 விக்கெட்டுகளையும், பிரசாத் 3 விக்கெட்டுகளையும், சமீரா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.இலங்கை அணி தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

No comments:

Post a Comment