W3C Web Resources



Saturday, January 31, 2015

மட் /செங்கலடி விவேகானந்தா வித்யாலயத்தில் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி

பி. லிகிதரன்

கல்குடா வலயத்தில் வளர்ந்து வரும் பாடசாலைகளில் முதன்மை பாடசாலையாக விளங்கும் மட்/ செங்கலடி விவேகானந்தா வித்யாலயத்தில் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி கடந்த வெள்ளிகிழமை மிகவும்சிறப்பான முறையில் வித்யாலய அதிபர் திரு. சிவலிங்கராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் கல்குடா வலய கல்வி பணிப்பாளர், கோட்ட கல்வி பணிப்பாளர், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், பழைய மாணவர் என பாடசாலை நலனில் அக்கறை உள்ளோர் பலர் கலந்து கொண்டனர். இவ் நிகழ்வில் பேசிய கல்குடா வலய கல்வி பணிப்பாளர் அவர்கள் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதன் முக்கியத்துவம் தொடர்பாக பேசினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அதிபரின் நன்றி உரையுடன் போட்டிகள் இனிதே நிறைவடைந்தன.







No comments:

Post a Comment