காதலி மற்றும் மனைவிகளினால் தான் இந்திய வீரர்கள் சரிவர விளையாடவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதன் டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது.
பலரும் இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து கொண்டிருக்கும் போது வீரர்களின் மனைவி மற்றும் காதலி தான் இதற்கு காரணம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.இங்கிலாந்து தொடருக்கு இந்திய அணி கிளம்பிய போது வீரர்களுடன் மனைவியரும் செல்ல இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி கொடுத்திருந்தது.
ஆனால் போன இடத்தில் 3-1 என்ற கணக்கில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா இழந்து கடுமையான விமர்சனத்துக்குள்ளானது.இந்திய அணி வீரர்களிலேயே மிகப் பெரிய சொதப்பலாக கோஹ்லி தான் இருந்தார். 10 இன்னிங்ஸ்களில் மொத்தமே 134 ஓட்டங்கள் தான் எடுத்தார். இதில் 2 முறை டக் அவுட் வேறு ஆனார்.
ஒரு நாள் போட்டிகள், டி20, டெஸ்ட் என கலக்கலாக ஆடிய கோஹ்லி இங்கிலாந்தில் சொதப்ப அவரது காதலி அனுஷ்கா சர்மா தான் காரணமாக இருந்துள்ளார்.விராட் கோஹ்லி தன்னுடன் காதலி அனுஷ்காவையும் அழைத்துச் செல்ல சிறப்பு அனுமதி கோரியிருந்தாராம், வாரியத்திடமும் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதேபோல அஸ்வின், சட்டேஸ்வர் புஜாரா, முரளி விஜய், ஸ்டூவர்ட் பின்னி, கெளதம் கம்பீர் ஆகியோர் வாரியத்திடம் அனுமதி பெற்று தங்களது மனைவிகளையும் அழைத்துச் சென்றனர்.இதுகுறித்து கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், டெஸ்ட் தொடர் முழுவதும் மனைவியரும், தோழியரும் கூடவே இருந்ததால், வீரர்களால் விளையாட முடியாமல் போனது.
அவர்கள் பயிற்சி செய்ய நினைத்தாலும் இவர்கள் விடுவதில்லை. ஊர் சுற்றப் போகலாம் என அழைத்துள்ளனர். பிறகெப்படி வீரர்களால் கவனமாக ஆட முடியும்.இதைத் தொடர்ந்து வீரர்களுடன் எவ்வளவு நாட்களுக்கு மனைவியர் உடன் இருக்கலாம் என்பது குறித்து இனி வரையறை நிர்ணயிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment