ஆந்திர மாநிலத்தில் 73 வயது நிரம்பிய மணமகனுக்கும், 67 வயது நிரம்பிய மணமகளுக்கும் அதிசய திருமணம் நடந்துள்ளது.ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் குருவங்கா கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமசாமி (73), ஸ்ரீகாகுளம் மாவட்டம் வீரகட்டம் பகுதியை சேர்ந்த போலம்மாள் (67) இந்த இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கடந்த 58 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்தனர்.
இவர்களுக்கு நான்கு மகன்கள். இவர்கள் அனைவருக்கும் திருமணங்கள் நடந்து, பிள்ளைகளும் பிறந்து பெரியவர்களாயினர். பேரன், பேத்திகள் கூட பெரியவர்களாகி விட்ட நிலையில், சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்து கொள்ளவில்லையே என்கிற கவலை ராமசாமிக்கு இருந்துள்ளது.
இதனை அறிந்த மகன்கள், மருமகள்கள் மற்றும் பேரன், பேத்திகள், ராமசாமிக்கும், போலம்மாளுக்கும் முறைப்படி திருமணம் செய்வதென முடிவு செய்து உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் திருமணத்திற்கு அழைத்துள்ளனர்.இவர்களது திருமணம் தோட்ட பல்லி என்கிற கிராமத்தில் உள்ள ராமர் கோவிலில் எளிமையாக நடந்தது.

No comments:
Post a Comment