W3C Web Resources



Wednesday, August 6, 2014

நீச்சலுடை, குத்துப்பாட்டு என கவர்ச்சியில் களமிறங்கும் த்ரிஷா. கோலிவுட் அதிர்ச்சி….!


ஜெயம் ரவி – த்ரிஷா ஜோடியாக நடித்த பூலோகம் திரைப்படம் விரைவில் வெளிவர உள்ள நிலையில் மீண்டும் ஜெயம் ரவியுடன் த்ரிஷா ஜோடி சேர்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த படத்தில் அவர் இரண்டு கதாநாயகிகளுள் ஒருவராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இன்னொரு கதாநாயகி அஞ்சலி என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சுராஜின் அடுத்த படத்தில் ஜெயம் ரவி – அஞ்சலி ஜோடியாக நடிக்கும் புதிய படத்தில் நவநாகரீக நகரத்து பெண் வேடத்தில் நடிக்க சுராஜ் ஒரு நடிகையை தேடிக்கொண்டிருந்தார். அவர் காஜல் அகர்வால், கேத்தரீன் தெரேசா, த்ரிஷா ஆகியோர்களில் ஒருவரை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார். முடிவில் ஜெயம் ரவியின் சிபாரிசு காரணமாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அஞ்சலி கிராமத்து பெண்ணாகவும், த்ரிஷா நகரத்து பெண்ணாகவும் நடிக்க இருக்கும் இந்த படத்தில் த்ரிஷாவுக்கு சிறிய வேடம்தான் எனினும் கவர்ச்சி களைகட்டும் வேடமாம். இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் புகுந்து விளையாட இருப்பதாக கூறப்படுகிறது. நீச்சலுடை, மது அருந்துவிட்டு குத்துப்பாட்டு ஆடும் காட்சிகளும் உண்டு என கூறப்படுகிறது. த்ரிஷாவின் அதிரடி கவர்ச்சியால் கோலிவுட் அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த படத்திற்கு பின்னர் மீண்டும் த்ரிஷா ஒரு ரவுண்டு கோலிவுட்டில் வருவார் என படக்குழுவினர் உறுதியாக கூறுகின்றனர்.


No comments:

Post a Comment