மிகச் சிறிய ரக விமானங்கள் உருவாக்கம்
இராணுவ உளவுத்தேவைகளின் போது வீடியோ பதிவுகளை செய்யக்கூடியதும், சட்டைப்பையில் வைத்து எடுத்துச்செல்லக்கூடியதுமான சிறிய ரக விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.அமெரிக்க இராணுவத்தினரால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ட்ரோன் வகை விமானங்கள் 16 கிராம்களே எடை உடையனவாக காணப்படுகின்றன.
மேலும் ஒன்றுடன் ஒன்று தொடர்பான 3 கமெராக்களை கொண்டுள்ள இந்த விமானங்கள் GPS வசதியினையும் உள்ளடக்கியுள்ளது.
இவை தொடர்ச்சியாக 20 நிமிடங்கள் வரை பறந்து தகவல்களை சேகரித்து வழங்கக்கூடியன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment