பிரித்தானிய நிறுவனமொன்றைச் சேர்ந்த பெண் வடிவமைப்பாளர் ஒருவர் நுகர்வோரை அதிக சொகுசாக உணரச் செய்யக் கூடிய விசேடமான 'மனிதத் தோல்' கதிரைகளை உருவாக்கியுள்ளார். இக்கதிரையை உருவாக்குவதற்காக மனிதத் தோலினை ஒத்த மூலப்பொருளினை உருவாக்க பல நாட்களை செலவிட்டுள்ளார் கிகி.
சிலிக்கனை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட மூலப்பொருளானது மனித தோலினைப் போன்ற உணர்வையும் அதேவேளை சவரம் செய்த பின்னர் தோலில் ஏற்படும் தோல் மணத்தினையும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
'உடலின் தோல்' எனும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இது உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமே உடலமைப்பு மற்றும் தோல் குறித்து கிகி கற்றுள்ளார்.
இக்கதிரையின் மேல் அமரும்போது பருமனான மனிதனின் வயிற்றில் அமர்ந்தது போன்ற உணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கதிரையுடன் வாடிக்கையாளரின் தோல், தொடுகையை ஏற்படுத்தும்போது ஒரு பிணைப்பு ஏற்படும் என நம்புகிறார் கிகி.
இந்த 'மனிதத் தோல்' கதிரை மற்றும் புட்ரெஸ்ட் (கால் வைக்கும் சிறிய ஸ்டூல்) ஆகிய இரண்டும் சேர்த்து சுமார் 5.2 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த 'மனிதத் தோல்' கதிரை மற்றும் புட்ரெஸ்ட் (கால் வைக்கும் சிறிய ஸ்டூல்) ஆகிய இரண்டும் சேர்த்து சுமார் 5.2 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.


No comments:
Post a Comment