W3C Web Resources



Tuesday, July 29, 2014

HUAWEI அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி


சில புதிய வகையான ஸ்மார்ட் கைப்பேசிகளை உற்பத்தி செய்து வருவதாக அறிவித்துள்ள Huawei நிறுவனம், விரைவில் Huawei Ascend Mate 3 எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள இக்கைப்பேசியானது 6 அங்குல அளவு, 1080 x 1920 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவை தவிர Octa-Core HiSilicon Kirin 920 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இவற்றுடன் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவற்காக 5 மெகாபிக்சல்களை உடைய கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment