W3C Web Resources



Wednesday, June 24, 2015

பங்களாதேஷ்க்கு பதிலடி! இந்தியா ஆறுதல் வெற்றி


இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிய மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி 77 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்படுத்தாடிய
இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 317 ஓட்டங்களை குவித்தது. இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசை சிறப்பாக இருந்தது. இந்திய அணி சார்பாக ஷிகர் தவான் 75 ஓட்டங்களையும் அணி தலைவர் தோனி 69 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர். பங்களாதேஷ் அணியின் மஷ்ரபி மோர்த்தசா 03 விக்கெட்களை வீழ்த்தினார். பதிலுக்கு விளையாடிய பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சொதப்பினர். சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்தன. இந்திய அணி சார்பாக சுரேஸ் ரெய்னா 3 விக்கெட்களை வீழ்த்தினார். இறுதியில் பங்களாதேஷ் அணி 47 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ஓட்டங்கள் மாத்திரமே பெற்று 77 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது. பங்களாதேஷ் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது, இந்திய அணிக்கு எதிராக பங்களாதேஷ் அணி பெறும் முதல் தொடர் வெற்றியாக இத் தொடர் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment