போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஏறாவூர் போலீஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வண்ணத்துபூச்சி சமாதான பூங்காவின் உறுப்பினர்களினால் செங்கலடி பிரதான சந்தியில் போதைப்பொருள் எதிர்ப்பு தின வீதி நாடகம் இன்று மாலை நிகழ்த்தப்பட்டது.
போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் சமூக சீரழிவுகள் தொடர்பாகவும் குடும்பங்களில் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் தெளிவாக சித்தரிக்கப்பட்டது. போதைப்பொருள் பாவனையினை முற்றாக ஒழிப்பதன் மூலம் அல்லது குறைப்பதன் மூலம் குடும்பங்களில் ஏற்படும் சீரழிவுகளை நீக்கலாம் எனவும் வளர்ந்து வரும் சிறுவர் சமூதாயத்தை நல்ல பாதையில் கொண்டு செல்லலாம் என்றும் ஒளிமயமான சிறுவர் சமூதாயத்தை உருவாக்க எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் உறுதி எடுக்கப்பட்டது.





No comments:
Post a Comment