W3C Web Resources



Wednesday, June 10, 2015

இலங்கை வீரர்களுக்கு ஜாம்பவான்களின் பயிற்சி: வெட்டிமுனி நம்பிக்கை



தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஜொன்டி ரோட்ஸ் இலங்கை வீரர்களுக்கு பயிற்சியளித்தது திருப்தி அளிக்கும் விதமாக இருந்ததாக இடைக்கால சபைத் தலைவர் வெட்டிமுனி தெரிவித்துள்ளார்.இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடரைத் தொடர்ந்து குறுகிய கால பயிற்சியாளராக இருக்குமாறு இலங்கை சார்பில், ஜொன்டி ரோட்ஸூடன் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்ற ஜொன்டி ரோட்ஸ் இலங்கை அணி வீரர்களுக்கு களத்தடுப்பு பயிற்சி வழங்கினார்.

இது பற்றி இலங்கை கிரிக்கெட் இடைக்கால சபைத் தலைவர் வெட்டிமுனி கூறுகையில், இலங்கை வீரர்களுக்கு பயிற்சியளிக்க வந்தமைக்கு ஜொன்டி ரோட்ஸுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், அவரது பயிற்சியின் கீழ் புதிய அனுபவங்களை இலங்கை வீரர்கள் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்காலத்தில் இது போன்ற பல ஜாம்பவான்களை பயிற்சிக்காக அழைக்க காத்திருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment