W3C Web Resources



Wednesday, June 10, 2015

ஹிட்லர் வரைந்த 100 ஆண்டுகள் பழமையான ஓவியங்களை ஏலம் விட முடிவு

ஜேர்மனியின் அடால்ப் ஹிட்லர் வரைந்த 100 ஆண்டுகளை கடந்த ஓவியங்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போரின்போது ஜேர்மனியின் சர்வாதிகாரியாக இருந்தவர் அடால்ப் ஹிட்லர்.கொடுங்கோலர் என்று கூறப்படும் இவருக்கு ஓவியம் வரைவதிலும் ஆர்வம் இருந்துள்ளது.

இந்நிலையில் ஹிட்லர் வரைந்த ஓவியங்களை ஏலம் விட நூரிம்பெர்கை சேர்ந்த ஏல நிறுவனம் ஒன்று முடிவு செய்துள்ளது.
இந்த ஓவியங்கள் 1904 -1922 ஆகிய காலகட்டங்களுக்கு இடையே வரையப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.
மேலும் இதில் ஏ. ஹிட்லர் என கையெழுத்தும் காணப்படுகின்றன. அவர் வரைந்த 14 ஓவியங்கள் இம்மாதத்தின் 18 -20 தேதிகளில் ஏலம் விடப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் யூரோவில் இருந்து 45 ஆயிரம் யூரோ வரைக்கும் இந்த ஓவியங்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நவம்பர் மாதம் இதே நிறுவனம் நடத்திய ஏலத்தில் 1914 ஆம் ஆண்டு ஹிட்லர் வரைந்த ஓவியம் ஒன்று 1 லட்சத்து 30 ஆயிரம் யூரோவுக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment