W3C Web Resources



Friday, August 1, 2014

டோனியை மிரட்டி வைத்த I.C.C

ஜடேஜாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை நியாயமற்றது என்று கூறிய டோனியின் கருத்துக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது.நாட்டிங்காம் டெஸ்டின் போது இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கும், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இந்த விவகாரத்தில் ஜடேஜாவை திட்டி தள்ளிவிட்டதாக ஆண்டர்சன் மீதான புகார் இன்று விசாரணைக்கு வருகிறது.அதே சமயம் ஆண்டர்சனை மிரட்டும் வகையில் ஜடேஜா நடந்து கொண்டதாக கூறி ஜடேஜாவுக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) போட்டி நடுவர் டேவிட் பூன் அபராதமாக விதித்தார்.
இந்த தீர்ப்பால் கொதித்து போன இந்திய அணித்தலைவர் டோனி, எந்த தவறும் செய்யாத ஜடேஜாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது வேதனைக்குரியது.
எங்கள் தரப்பு நியாயங்களை புறக்கணித்து விட்டனர் என்று பகிரங்கமாக குற்றசாட்டினார். அதே போல் இங்கிலாந்து அணித்தலைவர் அலஸ்டயர் குக்கும் இந்த விவகாரத்தில் சில கருத்துகளை கூறியிருந்தார்.

இந்த நிலையில் டோனியின் இந்த கருத்துக்கு ஐ.சி.சி. கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினையில் டோனியும், குக்கும் வெளிப்படையாக தெரிவித்த சில கருத்துகள் ஐ.சி.சி. ஒழுங்கு நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிடுவதாக உள்ளன.
இந்த தீர்ப்பை சம்பந்தப்பட்ட அனைவரும் மதிக்க வேண்டும். இது போன்ற சட்ட ரீதிரியான பிரச்சனையில் கருத்துகளை வெளியிடும் போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று ஐ.சி.சி. எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment