W3C Web Resources



Thursday, August 14, 2014

காட்டுக்குள் மாயமான சிறுமி: கண்டுபிடித்த நாய் குட்டி

ரஷ்யாவில் 3 வயது சிறுமி ஒருவர் காட்டில் தொலைந்து 11 நாட்கள் கழித்து அவரது நாய் குட்டியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.ரஷ்யாவை சேர்ந்த கரினா (3) என்ற சிறுமி, ஒரு அடர்ந்த காட்டுக்குள் தொலைந்துள்ளார்.
சிறுமி தொலைந்ததும், பெற்றோர் கொடுத்த புகாரையடுத்து 100க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டும் அந்த அடர்ந்த காட்டில் சிறுமியை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் சிறுமியின் நாய் குட்டி தான் மீட்பு குழுவினருக்கு சிறுமி இருக்கும் இடத்திற்கு வழி காட்டியுள்ளது. இதனையடுத்து கரினா பாதுகாப்பாக மீட்கபட்டுள்ளார்.
அந்த காட்டில் குளிரிலிருந்து காப்பாற்றி கொள்ள தனது நாயை கட்டி பிடித்துக்கொண்டு சிறுமி தூங்கியதும், பழங்களையும் நதியில் உள்ள தண்ணீரையும் குடித்து வாழ்ந்ததும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மீட்பு குழு நபர் ஒருவர் கூறுகையில், கரினா வெறும் 10 கி்லோ எடை தான் இருப்பார் என்றும், மேலும் சிறுமி இத்தனை நாட்களாக மயங்காமல் இருந்தது மிகவும் ஆச்சரியம் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment