W3C Web Resources



Friday, August 22, 2014

ஐ.சி.சி டெஸ்ட் தரப்படுத்தல் - இலங்கை முன்னேற்றம், இந்தியா பின்னடைவு

ங்கிலாந்து - இந்தியா மற்றும் இலங்கை-பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்கள் முடிவடைந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. புதிய தரப்படுத்தலின்படி தென் ஆப்ரிக்கா அணி முதலிடத்திலும், அவுஸ்திரேலிய அணி இரண்டாமிடத்திலும், இங்கிலாந்து அணி மூன்றாமிடத்திலும் உள்ளன.
 இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட தொடரில் தோல்வி அடைந்த இந்திய அணி 6 புள்ளிகளை இழந்து நான்காவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு பின்னடைந்துள்ளது.  
இந்தியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றி அசத்திய இங்கிலாந்து அணி இரண்டு இடம் முன்னேறி மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளது.பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் தன்வசப்படுத்திய இலங்கை அணி ஐந்தாமிடத்திலிருந்து நான்காமிடத்திற்கு முன்னேறியுள்ளது.
இலங்கையிடம் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி 7 புள்ளிகளை இழந்த நிலையில் மூன்றாமிடத்திருந்து ஏழாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் தலா 96 புள்ளிகள் பெற்ற போதிலும் மயிரிழையில் இந்தியா பாகிஸ்தானை விட முன்னிலையில் இருக்கிறது.

No comments:

Post a Comment