W3C Web Resources



Thursday, August 21, 2014

சோதனையில் டோனி: மோசமான சாதனையில் கோஹ்லி

ங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் டோனி தலைமையிலான இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது.இங்கிலாந்திடம் தொடரை 3-1 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி, கடைசி மூன்று ஆட்டங்களில் சொதப்பல் விளையாட்டை மட்டும் தான் வெளிப்படுத்தியது.

டோனி மட்டும் தான் அணியில் ஓரளவு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் மற்ற வீரர்களின் நிலையற்ற தன்மை கூட அணித்தலைவரை மட்டுமே சேரும்.இந்த தோல்வியின் எதிரொலி அணியில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.முதல் கட்டமாக பயிற்சியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டு, புதிய இயக்குனராக முன்னாள் அணித்தலைவர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விராட் கோஹ்லி 10 இன்னிங்ஸில் 134 ஓட்டங்களே எடுத்தார். இது மோசமான சாதனையாகும்.10 இன்னிங்ஸில் துடுப்பாட்டம் செய்து குறைவான ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் கோஹ்லி 2வது இடத்தை பிடித்தார்.இந்நிலையில் வரும் 25ம் திகதி ஒரு நாள் போட்டி தொடர் தொடங்கவுள்ளது.

No comments:

Post a Comment