இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் இடம்பெற்றுள்ளார். அணித் தலைவர் அலிஸ்டர் குக்குடன் இணைந்து அலெக்ஸ் ஹேல்ஸ் ஆரம்ப ஆட்டக்காரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
25 வயதான அலெக்ஸ் ஹேல்ஸ் இதுவரை 32 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளபோதும் ஒருநாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இப்போதுதான் பெற்றுள்ளார்.
முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவட் பிரோட் முழங்கால் ஏற்பட்டுள்ள உபாதையால் ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை.
வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின் அணியில் இடம் பெற்றுள்ளார். அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சனுக்கு ஓய்வளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
2ஆவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட சகலதுறை ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ{ம் அணியில் இடம்பிடித்துள்ளார். மற்றொரு சகலதுறை ஆட்டக்காரரான ரவி போபராவுக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.
இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடருக்குப் பிறகு செப்டம்பர் 7 ஆம் திகதி ஒரேயொரு இருபதுக்கு 20 போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன.
இங்கிலாந்து அணி விவரம்: அலிஸ்டர் குக் (அணித் தலைவர்), மொயீன் அலி, ஜேம்ஸ் அண்டர்சன், கேரி பேலன்ஸ், இயான் பெல், ஜோஸ் பட்லர் (விக்கெட் காப்பாளர்), ஸ்டீவன் ஃபின், ஹரி கர்னே, அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டான், இயன் மோர்கன், ஜோய் ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் டிரெட்வெல், கிறிஸ் வோக்ஸ்.
No comments:
Post a Comment