கூகுள் நிறுவனம் கடலடி இணைப்பினூடான இணைய வேகத்தினை அதிகரிக்கும் திட்டத்தை செயற்படுத்த தயாராகி வருகின்றது.இதன் முதற்கட்டமாக அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடலடி இணைய இணைப்பின் வேகத்தினை அதிகரிக்கவுள்ளது.இதற்காக 6 பைபர் ஒப்டிக்கல் கேபிள்களை பயன்படுத்தவுள்ளது. இதன் மூலம் 60Tbps வேகம் கொண்ட இணைய இணைப்பினைவழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இச்செயற்திட்டத்தில் China Mobile International, China Telecom Global, Global Transit, KDDI, மற்றும் Singte ஆகிய நிறுவனங்கள் கூகுளுடன் இணைந்து பணியாற்றவுள்ளன.இத்திட்டமானது 2016ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டுப் பகுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது

No comments:
Post a Comment