W3C Web Resources



Monday, July 21, 2014


கோச்சடையான், வீரம், ஜில்லா வசூலை நெருங்குகிறது வேலையில்லா பட்டதாரி!


தனுஷ் , அமலாபால், சமுத்திரக்கனி, விவேக்,சுரபி, நடித்து வேல்ராஜ் இயக்கத்தில் ஜூலை 18ம் தேதி வெளியான படம் 'வேலையில்லா பட்டதாரி'

அனிருத் இசையில் உருவான இப்படத்தின் டிரெய்லர்கள், பாடல்கள் என அனைத்தும் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றன. படம் வெளியான நாள் முதல் அனைத்து தரப்பிலும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

தனுஷின் 25வது படமான 'வேலையில்லா பட்டதாரி தற்போது அமெரிக்க மார்க்கெட் வரிசையிலும் கணிசமான வசூலை குவித்து வருகிறது.

அமெரிக்காவில் 2014ம் ஆண்டு அதிக வசூல் பெற்ற தமிழ்ப் படங்கள் வரிசையில் முதல் ஐந்து இடங்களில் 'கோச்சடையான்', 'வீரம்', 'ஜில்லா', 'மான்கராத்தே', மற்றும் 'இது கதிர்வேலன் காதல்' திரைப்படங்கள் இருந்தன.

தற்போது படம் ரிலீஸ் ஆகி வெறும் மூன்று நாட்களில் 'மான் காராத்தே' மற்றும் 'இது கதிர்வேலன் காதல்' ஆகிய இரு படங்களையும் பின்னுக்குத் தள்ளி நான்காம் இடம் பிடித்துள்ளது 'வேலையில்லா பட்டதாரி'

இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் தனுஷ், இதுவரை வெளியான எனது 25 படங்களில் இந்த அளவிற்கு வெளியான முதல் நாளே பெரிய அளவில் வசூல் கிடைத்தது 'வேலையில்லா பட்டதாரி' படத்திற்கு மட்டும் தான் என தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment